சிஇஓ சுந்தர் பிச்சையை மாற்ற நினைக்கும் கூகுள்?

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்டுஇன் வலைதளத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான பதிவுகள் அதிகம் பகிரப்படும். பெரும் நிறுவனங்கள் முதல் சிறு வர்த்தக நிறுவனங்களும் லிங்டுஇன் வலைதளத்தை வேலைவாய்பிற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.
லிங்டுஇன் ப்ரிமியம் உறுப்பினர்கள் சந்தா செலுத்தி இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளத்தில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வேலைக்கான பணியிடம் காலியாக உள்ளது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை பார்த்த பலர் தங்களது விவரங்களை அதில் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த ஒருவர் போலியாக பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.